×

கொரோனா தடுப்பு பணி: விப்ரோ, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி நிதிஉதவி

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000-த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தியா முழுவதும் ஏப். 21-ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர். அந்த வரிசையில் சச்சின், கங்குலி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கினர். சானியா மிர்ஸா ரூ. 1.25 கோடியும், ரிலையன்ஸ் ரூ. 500 கோடியும் வழங்கியுள்ளது. அதே போல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நிதியாக நெய்வேலி என்எல்சி சார்பில் ரூ.25 கோடி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட் சொசைட்டி சார்பில் ரூ.50 லட்ச நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் தமிழக ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ. 1 கோடி வீதம் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது.

Tags : Wipro ,Asim Premji Foundation Coronation Prevention ,Azim Premji Foundation , Corona Prevention Mission, Wipro, Azim Premji Foundation, Prime Relief Fund
× RELATED விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம்